கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்களின் உணவுத் தவிர்ப்பு போராட்டம் முடிவு

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் தமது பூர்வீக காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை காணி உரிமையாளர்கள் இருவரினால் ஆரம்பிக்கப்பட்ட நீராகாரமின்றிய சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

எனினும் கவனயீர்ப்பு போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அறிவித்துள்ளனர்.நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் ஆகியோர், போராட்டம் இடம்பெற்ற இடத்துக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடியதனைத் தொடர்ந்து இந்த முடிவு எடுப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்பாபுலவு கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட புலவுக்குடியிருப்பு, சீனியாமோட்டை, சூரிபுரம் ஆகியவற்றை போராட்டம் மூலம் பெற்றுக்கொண்ட மக்கள் பூர்வீக நிலத்தை மீட்கும் இந்த தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts