கேப்பாப்புலவில் தொடரும் போராட்டம்!

முல்லைத்தீவு மாட்டத்தின் கேப்பாப்புலவு பூர்வீகக் கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி போன நிலையில் இன்று 175 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது.

கேப்பாப்புலவு மக்கள், இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமக்கு சொந்தமான காணிகள் விடுவிக்கப்படும் வரை தமது நில மீட்புப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று அவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

Related Posts