கேப்பாப்பிலவு மக்களுக்கு மாற்றுக் காணிகளே வழங்கப்படும்: இராணுவம் திட்டவட்டம்

கேப்பாப்பிலவு மக்களின் காணிகளுக்கு பதிலாக மாற்றுக் காணிகள் அல்லது நஷ்டஈட்டுத்தொகையே வழங்கப்படும் என இராணுவத்தினர் உறுதியாக கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

கேப்பாப்பிலவு மக்களின் காணியிலுள்ள முல்லைத்தீவு இராணுவ கட்டளைத் தலைமையகத்தை அகற்றி அந்த காணிகளை மக்களிடம் மீளக் கையளிப்பது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) அரசாங்க அதிபர் மற்றும் படையினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே இராணுவத்தினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், “கேப்பாப்பிலவு மக்களுடைய காணிகளை மக்களிடம் மீள வழங்க முடியாது என படையினர் உறுதியாக கூறியுள்ளனர்.

கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை பூரணமாக மக்களிடம் கையளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள படையினர், 55 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகளை வேண்டுமானால் வழங்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஏனைய காணிகளுக்கு உரித்தான மக்களுக்கு மாற்றுக் காணிகள் அல்லது நஷ்டஈடு வழங்கலாம் எனவும் படையினர் கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

Related Posts