கேப்பாப்பிலவு மக்களின் தொடரும் மண்மீட்பு போராட்டம்

கேப்பாப்பிலவு பூர்வீக கிராமத்தை விடுவிக்க கோரி ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (சனிக்கிழமை) நான்காவது நாளாகவும் தொடர்கிறது.

தமது பூர்வீக கிராமத்தில் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள 150இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் காணிகளை விடுவிக்க கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கேப்பாப்பிலவு பூர்வீக கிராமம் முழுவதும், ராணுவத்திற்காக சுவீகரிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் சூரிபுரத்தில் குடியேற்றப்பட்டனர்.

எனினும், இந்த வீட்டுத்திட்டத்தில் பல குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டும் மக்கள், தங்களை தங்களின் பூர்வீக கிராமங்களில் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும், காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கோரியே, தொடர்ந்து 4 நாட்களாக போராடி வருகின்றனர்.

Related Posts