கேப்பாப்பிலவு போராட்டம் : சொந்த காணிகளில் குடியமர்த்தப்படும்வரை போராடுவோம்!

சொந்த காணிகளில் குடியமர்த்தப்படும்வரை தமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்து முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு- பிலக்குடியிருப்பு மக்கள் இன்று (சனிக்கிழமை) 12ஆவது நாளாகவும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கேப்பாப்பிலவு மக்களின் இம் மண்மீட்பு போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில், நேற்றைய தினம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அங்கு சென்று தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர்.

தம் மீது கரிசனை கொண்டு பல்வேறு அரசியல் தரப்புக்களும் தம்மை சந்தித்து வருகின்ற போதிலும், எவரும் தமது பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதாக இல்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், ராணுவம் வசமுள்ள தமது காணிகளை விடுக்குமாறு வலியுத்தி முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாக தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts