கேப்பாப்பிலவு படைமுகாம் கட்டடங்கள் புனருத்தாபனம்!

கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி தொடர்ச்சியான போராட்டத்தினை நடத்தி வருகின்ற நிலையில், காணி விடுவிப்பு தொடர்பான எந்த விதமான கரிசனையும் கொள்ளாத விமானப்படையினர், படைமுகாமுக்குள் உள்ள கட்டடங்களின் புனருத்தான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக விமானப்படையின் விடுமுறை மண்டபத்துக்கான புனருத்தான பணிகளையே அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

பிலவுக்குடியிருப்பில் உள்ள மக்களுடைய காணிகளை ஆக்கிரமித்து வைத்துள்ள விமானப்படையினர் அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தினையும் தமது ஆக்கிரமிப்புக்குள் வைத்துள்ளனர்.

குறித்த ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆக்கிரமித்து வைத்துள்ள விமானப்படையினர் அதனை விடுமுறை மண்டபமாக (கொலிடே கோல்) பயன்படுத்தி வருகின்றனர்.

குறித்த பகுதிகளை விடுவிக்குமாறு கோரி, 18 நாட்களாக மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், அதனை கண்டுகொள்ளாத விமானப்படையினர், அங்குள்ள கட்டத்தின் புனருத்தான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமானப்படையினரின் இச் செயற்பாடானது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை எரிச்சலடையச் செய்துள்ளது.

Related Posts