கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் ஆதரவு!

புதுக்குடியிருப்பு கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் நேற்று முதல் இணைந்து கொண்டுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை எட்டாவது நாளாக முன்னெடுதிருந்த நிலையில் மாணவர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து போராட்ட இடத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று ஒன்பதாவது நாளாக கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த காணிகளை விடுவிக்குமாறுகோரி அகிம்சை வழியில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

பிலாக்குடியிருப்பு பகுதி மற்றும் புதுக்குடிருப்பு பிரதேச செயலகம் முன்னால் வயது வித்தியாசம் இன்றி சிறுவர்கள், மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என இராப்பகலாக கொட்டும் பனியிலும் தமது உரிமைக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

Related Posts