கேப்பாபிலவு நிலம் விடுவிக்கப்படும்: சந்திரிக்கா

கேப்பாப்பிலவில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்களிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பாண்டார நாயக்கா குமாரதுங்க காணிகளை விடுவிக்க ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

கேப்பாப்பிலவில் மக்களின் குழுவிற்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த உறுதிமொழியை அவர் வழங்கியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், மற்றும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரின் செயலாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது, குறித்த காணி பிரச்சினை தொடர்பில், இராணுவ தளபதியுடன் உரையாடிய சந்திரிக்கா விரைவில் காணிகளை விடுவிக்க ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

Related Posts