கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி திடீர் விலகல்

இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் டோனி பல்வேறு சாதனைகளை செய்தார்.

இதனையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி விலகினார். அவரை தொடர்ந்து கோலி கேப்டனாக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், இந்திய அணியின் ஒருநாள் மற்றும் இருபது ஒருவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் டோனி தற்போது விலகி உள்ளார்.

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக டோனி பிசிசிஐ இடம் முறைப்படி தகவல் தெரிவித்துள்ளார். பிசிசிஐ தரப்பில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது ஒருவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிக்கான தேர்வில் தோனி இடம்பெறுவார்.

டோனியின் விலகலை தொடர்ந்து விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து விதமான போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Related Posts