கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தனுஷூக்கு எதிராக போராட்டம்?

விளம்பரத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்களை கொச்சைப்படுத்தியதாக கூறி நடிகர் தனுஷூக்கு எதிராக தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் போர்க்கொடி தூக்கியுள்ளது.

இது தொடர்பாக தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜி.தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பிரபல திரைப்பட நடிகர் தனுஷ், தனியார் டிடிஎச் நிறுவன விளம்பரத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்களை கொச்சைப்படுத்தி கேவலமாக சித்தரிக்கும் நடவடிக்கை கடுமையாக கண்டிக்கிறோம். இந்த விளம்பர காட்சிகளை உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். கேபிள் டிவி ஆபரேட்டர்களை கொச்சைப்படுத்தி சித்தரிக்கும் நடவடிக்கை ஏற்கமுடியாது.

இந்த காட்சியை ரத்து செய்து தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தவறும் பட்சத்தில் பல்லாயிரக்கணக்கான கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்த நேரிடும் என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

Related Posts