கேன்ஸின் உயர்ந்த விருதை வென்ற முதல் ஈழத் தமிழர் படம் “தீபன்”

கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் உயரிய விருதான தங்கப் பனை விருதை வென்றுள்ளது ஈழத் தமிழர்களின் அவல வாழ்வை எடுத்துக் கூறும் தீபன் திரைப்படம்.ஈழத் தமிழர்களின் வாழ்க்கையை முறையாக பதிவு செய்த முதல் ஐரோப்பியத் திரைப்படம் இது.

theepan

இயக்கியிருப்பவர் ஈழத் தமிழர் அல்ல மாறாக பிரான்சின் பிரபல திரைப்பட இயக்குனர் ஜக்குவாஸ் ஓடியேட். ஈழத்தமிழரின் அவல வாழ்வியலைக் கூறும் திரைப்படம் ஒன்று உலகின் மிகப்பெரிய விருதுக்குத் தேர்வாகியிருப்பது இதுவே முதல்முறையாகும்.

படத்தில் நாயகனாக ஜேசுதாசன் அந்தோணிதாசன், கதையின் நாயகியாக காளிஸ்வரி சீறிநிவாசன், சிறுமியின் வேடத்தில் கிளாடின் விநாசித்தம்பி நடித்திருந்த இந்தப் படம் பிரான்ஸ் நாட்டிற்கு அகதியாக தஞ்சம் கோரி செல்லும் மூன்று தனித் தனி ஈழத் தமிழர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் விதமாக படம் காட்சிபடுத்தப் பட்டிருந்தது.

பிரான்ஸ் நாட்டிற்கு செல்லும் மூன்று பேரும்( நாயகன், நாயகி ,மற்றும் சிறுமி ) தற்காலிகமாக தங்களை ஒரு குடும்பமாக இணைத்துக் கொள்கிறார்கள் அங்கு அவர்கள் படும் அவலங்கள் மற்றும் துயரங்களை வலியுடன் எடுத்துக் கூறுகிறது தீபன்.

இலங்கைத் தமிழர்களை பற்றி துணிச்சலாக ஒரு படம் எடுத்து அவர்களின் உண்மை வலிகளை பதிவு செய்ததற்காக இயக்குனருக்கு ஒரு சபாஷ்..

பிற நாடுகளுக்கு தஞ்சம் கோரி செல்பவர்களின் மனநிலை அவர்களின் வாழ்க்கை முறை பற்றி விரிவாக எடுத்துக் கூறிய இந்தப் படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் பல முன்னணி விமர்சனகர்கள் படத்தைப் பார்த்து விட்டு அதில் நடித்தவர்களையும் படத்தையும் பெரிதும் பாராட்டியது குறிப்பிடத் தக்கது.

தீபனுக்கு கிடைத்த விருது பல நல்ல படங்களை உலக சினிமாவிற்கு கொண்டுவர வழிவகுக்கட்டும்..

Related Posts