கேகாலையில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல்!!

கோகாலையில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, இந்த சம்பம் நேற்று (திங்கட்கிழமை) இரவு கேகாலை மாவட்டம் யட்டியன்தோட்டை கனேபொல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு, சிறுபான்மை மக்களாகிய மலையக பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் பலர் சொத்துக்களை இழந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதோடு, சம்பவம் தொடர்பாக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை சோசலிச குடியரசின் 7வது ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்ஷ நேற்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts