கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மூலிகை மருந்து முல்லைத்தீவில் தயாரிப்பு- அங்கீகாரம்பெற நடவடிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக மூலிகை மருந்து வில்லையை முல்லைத்தீவின் பிரபல தொழில் முயற்சியாளர் உற்பத்தி செய்துள்ளார்.

தொழில் முயற்சியாளரான சாயிராணி என்பவர் கடந்த வியாழக்கிழமை அது தொடர்பான விளக்கத்தினை மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினரிடம் விபரித்தார்.

கூட்டுக் குளிசை(கப்சூல்) வடிவில் தயாரிக்கப்பட்ட இந்த உற்பத்தியானது 100 வீதம் மூலிகைத் தயாரிப்பாகும்.

இந்நிலையில், முயற்சியாளரின் உற்பத்தி தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று ஆராய்ந்ததுடன் ஆயுள்வேத மருந்துகள் தொடர்பான அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்காள்ளப்பட்டுள்ளன.

Related Posts