கெஹலிய ரம்புக்வெலவுக்கு யாழ்.நீதிமன்றம் பிடியாணை

யாழ்.மாவட்டத்தில் வைத்துக் கடத்தப்பட்டு காணாமல்போன லலித், குகன் வழக்கில் முன்னாள் தகவல் தொடர்பாடல் ஊடகத்துறை அமைச்சருக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

ஜே.வி.பி கட்சியிலிருந்து பிரிந்து சென்ற நிலையில் யாழ்.மாவட்டத்தில் அரசியல் பணியாற்றிய லலித், குகன் ஆகியோர் கடத்தப்பட்டுக் காணாமல்போயினர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தையடுத்து முன்னாள் தகவல் தொடர்பாடல் ஊடகத்துறை அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெவல கடத்தப்பட்டு காணமல்போனவர்கள் தொடர்பாக மாறுபட்ட கருத்தை தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து குறித்த விடயமும் நீதிமன்றுன் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்த்து.

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணகளுக்காக மன்றில் ஆஜராகுமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் கடந்த முன்று தடவைகள் அழைப்பாணை விடுத்திருந்தது.

எனினும் அவர் மன்றுக்கு வந்திருக்காத நிலையில் இன்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதிபதி பெ.சிவகுமார் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மூன்று தடவைகள் மன்றுக்கு சமூகம் தராத நிலையில் முன்னாள் அமைச்சருக்கு பிடியாணை பிறப்பித்த நீதிபதி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ம் திகதி மன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts