கெற்பேலியில் இராணுவ முகாம் அமைக்க அனுமதி

Sri_Lanka_Army_Logoயாழ்ப்பாணம், சாவகச்சேரி, கெற்பேலி பகுதியில் இராணுவ முகாமொன்றை அமைப்பதற்கான அனுமதியினை காணி சீர்த்திருத்த ஆணைக்குழு வழங்கியுள்ளது. இதன் பிரகாரம் குறித்த பகுதியில் அமைந்துள்ள காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமாக சுமார் 64 பரப்பு காணியில் இராணுவ முகாம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி காணியில் இராணுவ முகாம் அமைப்பதற்கான அனுமதியினை வழங்குமாறு இராணுவத்தினரால் கடந்த வருடத்தில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், அதற்காக அனுமதியினை ஆணைக்குழுவின் தலைவர் நிமல் வி.புஞ்சிஹேவா வழங்கியுள்ளார் என்று ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட அதிகாரி என்.விமலராஜ் தெரிவித்தார்.

இந்நிலையில், மேற்படி காணியை இராணுவத்தினருக்கு வழங்குவதான அனுமதிக் கடிதம் கெற்பேலி கிராம அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், கிராம அலுவலர் காணி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்றும் அவ்வதிகாரி மேலும் கூறினார்.

Related Posts