கெர்சனின் தெற்குப் பகுதியில் உள்ள முக்கிய கிராமத்தை கைப்பற்றியது உக்ரைன் படைகள்

உக்ரைனிய படைகள் கெர்சனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு முக்கிய கிராமத்தை கைப்பற்றியுள்ளதாக உக்ரைனில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், டேவிடிவ் பிரிட் மீது உக்ரைனியக் கொடியை 35ஆவது கடற்படையினர் ஏற்றுவதைக் காட்டும் காணொளியை வெளியிட்டது.

அத்துடன், மற்றொரு ரஷ்ய இராணுவப் பின்வாங்கலை தொடர்ந்து, அருகிலுள்ள பல கிராமங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் கூறியது.

எனினும், ரஷ்யா இன்னும் தெற்கில் பிராந்திய தலைநகரான கெர்சன் நகரத்தை கட்டுப்படுத்துகிறது. ஆனால் உக்ரைனிய மொழியில் டினிப்ரோ என்று அழைக்கப்படும் டினீப்பர் ஆற்றின் வடக்கே உள்ள முழுப் பகுதியில் பல இடங்களில் உக்ரைனிய படையினர் முன்னேறி வருகின்றனர்.

Related Posts