கெய்ல் மீண்டும் டெஸ் போட்டிக்கு

மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் அதி­ரடி ஆட்­டக்­காரர் கிறிஸ் கெய்ல் இது­வரை 103 டெஸ்ட் போட்­டி­களில் விளை­யாடி 15 சதங்கள், 37 அரை சதங்­க­ளுடன் 7214 ஓட்­டங்­களைப் பெற்­றுள்ளார்.

cris-gail-west-indes

இதில் ஒரு போட்­டியில் அதி­க­பட்­ச­மாக 333 ஓட்­டங்கள் குவித்­துள்ளார். இவர் தனது முதுகுப் பகு­தியில் செய்து கொண்ட அறுவை சிகிச்சை கார­ண­மாக டெஸ்ட் போட்­டிகளில் விளை­யா­டாமல் இருந்தார். ஆனால், ஐ.பி.எல்., பிக் பாஷ் போன்ற லீக் தொடர்­களில் விளை­யாடி வரு­கிறார்.

கெய்ல் சொந்த நாட்டு அணிக்­காக விளை­யா­டு­வதை விட பணம் சம்­பா­திக்கும் நோக்­கத்தில் இரு­ப­துக்கு 20 லீக்கில் மட்­டுமே விளை­யாட விரும்­பு­கிறார் என்ற குற்­றச்­சாட்டு அவர் மீது உள்­ளது.

இந்­நி­லையில்,எனக்கு பணம் முக்­கி­ய­மல்ல, எனது நாட்டு அணிதான் முக்­கியம். ஆகவே, டெஸ்டில் மோச­மாக விளை­யாடி வரும் அணியை காப்­பாற்­று­வ­தற்­காக மீண்டும் அணிக்கு திரும்பும் எண்ணம் உள்ளது” என்று கெய்ல் கூறியுள்ளார்.

Related Posts