கென்யாவின் வடகிழக்கே முகமூடியணிந்த துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்திய பல்கலைக்கழக மாணவர் விடுதியை பாதுகாப்புப் படைகள் சூழ்ந்துள்ளன.
கரிஸ்ஸா என்ற ஊரிலுள்ள பல்கலைக்கழகத்திற்குள் எத்தனை பணயக் கைதிகள் பிடித்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பது இன்னும் தெரியவில்லை என பொலிசார் கூறுகின்றனர்.
நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் கூறுகிறார்.
பல்கலைக்கழக வளாகத்தில் யாரும் நுழையபடியாதபடி துப்பாக்கிதாரிகள் மறைந்திருந்து சுட்டுவருகிறார்கள் என அங்கிருந்து வரும்செய்திகள் தெரிவிக்கின்றன.
கென்யாவிலும் சொமாலியாவிலும் அடிக்கடி தாக்குதல் நடத்திவரும் அல்ஷபாப் இஸ்லாமியவாத ஆயுததாரிகள் கரிஸ்ஸாவில் பலமுறை தாக்குதல் நடத்தியதுண்டு.