கென்ய தாக்குதலில் 29 பேர் பலி

சோமாலியாவுக்கு அருகாக உள்ள கென்ய கடற்கரையோரக் குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட இரு தாக்குதல்களில் 29 பேர் கொல்லப்பட்டதாக, கென்யாவின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

_kenya_shooting_29prepole-dead

டானா ஆற்று கவுண்டியில் ஹம்பாவில் 20 பேர் கொல்லப்பட்டனர். அதேவேளை சோமாலிய எல்லைக்கு அருகாக லுமா கவுண்டியில் உள்ள வணிக நிலையம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

அப்போது அங்கு மக்கள் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

கடந்த மாதம் 60க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட எம்பெக்கடோனிக்கு அருகாக இரண்டாவது தாக்குதல் நடந்திருக்கிறது.

தாமே இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக சோமாலிய இஸ்லாமியக் குழுவான அல்சபாப் கூறியுள்ளது.

Related Posts