கூத்தாடி குறுந்திரைப்படம் வெளியீடு!

அம்பலம் திரைக்கூடத்தின் ‘கூத்தாடி’ குறுந்திரைப்படம் கடந்த திங்கட்கிழமை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் வெளியிடப்பட்டது.

kooththady-short

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வெளியீட்டுரையை ச.இராகவனும், மதிப்பீட்டுரையை ந.மயூரரூபனும் நிகழ்த்தினார்கள். பாரம்பரிய கலைஞர்களின் வாழ்வியலை பேசும் இந்தக் குறுந்திரைப்படத்தை தர்சனின் ஒளிப்பதிவிலும், ஸ்ரீ நிர்மலனின் இசையிலும், ஸ்ரீ துஷிகரனின் படத்தொகுப்பிலும், பிரதேசக் கலைஞர்களின் நடிப்பில் தபின் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறும்படத்தின் முதல் பிரதியை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் வெளியிட்டு வைக்க யாழ். அரசாங்க அதிபர் ந.வேதநாயகன் பெற்றுக்கொண்டார்.

Related Posts