கூட்டுறவுக்குள் அரசியல் கூடாது -சயந்தன்

கூட்டுறவு அடிப்படையான ஜனநாய கட்டமைப்பு அதில் எந்தவித மாற்றமும் இல்லை.கூட்டுறவாளர்களுக்கிடையில் அரசியல் சார்புகள் இருக்கலாம் ஆனால் கூட்டுறவுக்குள்ளே அரசியலை கொண்டு வருவதை எந்தவிதத்திலும் அனுமதிக்க கூடாது. என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் சயந்தன் தெரிவித்தார்.

நேற்று கூட்டுறவு தொழிற்சங்க ஊழியர் மாநாடு ஒன்று இடம்பெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

ஒன்றுக்கொன்று சந்திக்காத பிரச்சினைக்குள் கூட்டுறவு சிக்கிக் கொண்டுள்ளது.ஒன்று கூட்டுறவு அதல பாதாளத்தில் இருக்கிறது, அதனை மீட்டெடுக்க வேண்டும் மற்றொன்று கூட்டுறவு பணியாளர்களுடைய உரித்துக்கள் கிடைக்காமல் அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறாக இந்த இரண்டையும் ஒன்றுக்கொன்று எவ்வாறு இணைத்துக் கொண்டு செல்வது என கூட்டுறவு துறை திண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் வடமாகாண சபை தேர்தல் நடைபெற்றது.

மேலும் உங்கள் நன்மைக்காக போடப்பட்ட வாசகம் ஒன்றை நீங்கள் வேண்டா வெறுப்பாக பார்க்கிறீர்கள் கூட்டுறவில் இலாபம் அதிகரிக்கும் பொழுது சம்பளத்தை அதிகரித்து வழங்கலாம் என்று உங்கள் நன்மைக்காக போடப்பட்ட வசனம் இப்பொழுது கூட்டுறவு நஸ்டத்தில் இருக்கின்றதால இதனை வேண்டா வெறுப்பாக பார்க்கிறீர்கள் நடைமுறைச் சாத்தியமான வகையில் வடமாகாண சபை கூட்டுறவாளர்களது நலன்கள் தொடர்பில் கரிசனை செலுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts