கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது தாக்குதல்!

tnaவட மாகாண சபைத்தேர்தலில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கும் சுயேட்சைக்குழுவாக பூட்டு சின்னத்தில் போட்டிடும் வேட்பாளருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

காரைநகர் புதுறோட் பகுதியிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு 1.00 மணியளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் மூவர் காரைநகர் புதுறோட்டு வீதியில் சென்றுள்ளனர்.

இதன்போது பூட்டு சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழு வேட்பாளர் ஒருவர் கம்பி,மற்றும் பொல்லால் அந்த மூவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இத்தாக்குதலில், காயமடைந்த சுப்பிரமணியம் யோகேஸ்வரன், மற்றும், சுந்தரலிங்கம் ரவி சங்கர் ஆகியோர் காரைநகர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்தின் போது, உடனிருந்த தன்மீதும் தாக்குதல் மேற்கொண்டதாக காரைநகர் பிரதேச சபை தலைவர் வே. ஆணைமுகன் தெரிவித்தார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தாக ஆணைமுகன் மேலும் தெரிவித்தார்.

இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பிவைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts