கூட்டமைப்பு தோல்வியுற்றால் புதிய அரசமைப்பை நிறைவேற்ற முடியாது – சுமந்திரன் கவலை!

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கான மக்­கள் ஆத­ரவு சரிந்துவிட்­டது என்ற செய்தி பெப்­ர­வரி 11ஆம் திகதி வரு­மாக இருந்­தால், புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்ற முடி­யாது போகும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரிவித்துள்ளார்.
பரு­த்தித்­து­றை­யில் நேற்று இடம்­பெற்ற வேட்­பா­ளர் அறி­முக நிகழ்­வில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­விக்கையில்,

இடைக்­கால அறிக்­கை­யில் ஒற்­றை­யாட்சி என்ற சொல் பயன்­ப­டுத்­தப்­ப­டா­மல் அது இலங்­கைக்­குப் பொருத்­த­மற்­றது என்று குறிப்­பிட்­டு­விட்டு, மத்­தி­யி­லும் மாகா­ணங்­க­ளி­லும் ஆட்சி அதி­கா­ரங்­களை உப­யோ­கிக்­கின்ற நாடு என்ற வர்­ணிப்பு இருக்­க­வேண்­டும் என்று சொல்­லப்­பட்டு இருக்­கின்­றது. அதில் சொல்­லப்­ப­டும் ஒரு குறை ஏக்­கிய ராஜ்­ஜிய என்று சொல் உப­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் அது ஆட்சி முறை­யைக் குறிக்­கிற சொல் அல்ல என்­பது தெளி­வா­கச் சொல்­லப்­பட்ட இருக்­கி­றது.

ஏக்­கிய ராஜ்­ஜிய என்­பது பிரிக்­கப்­பட முடி­யாத ஒரு நாடு. அது­தான் அதன் வரை­வி­லக்­க­ணம் என்று சொல்­லப்­பட்டு இருக்­கின்­றது. சொல்­லப்­பட்­டது மட்­டு­மல்­லா­மல் புதிய அர­ச­மைப்­புச் சட்ட வரை­வில் எழு­தப்­ப­ட­வேண்­டும் என்­றும் சொல்­லப்­பட்­டி­ருக்­கி­றது. ஏக்­கிய ராஜ்­ஜிய ஒரு நாடு. அதற்கு நாங்­கள் இணங்­கு­கி­றோம். ஏன் இணங்­கு­கி­றோம்.

சிங்­க­ளத்­தில் சிங்­கள மக்­கள் மத்­தி­யிலே சுமந்­தி­ரன் சென்று பேச வேண்­டும் என்று ஒரு­வர் கடி­தம் எழு­திக்­கொண்­டி­ருக்­கி­றார். சென்று பேசு­வது அவ­ருக்­குத் தெரி­யாது. பல தடை­வ­கள் நான் சென்று பேசிக்­கொண்­டி­ருக்­கி­றேன். நாட்­டைப் பிரிக்­க­ வேண்­டாம் அதி­கா­ரங்­க­ளைப் பிரித்­துக் கொடுங்­கள். சிங்­கள மக்­கள் மத்­தி­யில் இருக்­கிற எண்­ணம் கூட்­டாட்­சி­யைக் கொடுத்­தால் நாடு பிரிந்­து­வி­டும். கூட்­டாட்­சி­யைக் கொடுத்­தால் நாடு பிரி­யாது. நாடு பிரி­யா­மல் இருக்க நீங்­கள் எதை­யும் எழு­த­லாம். அது­தான் நிபந்­தனை.

பிரித்­துக் கொடுக்­கப்­ப­டு­கின்ற அதி­கா­ரங்­கள் முழு­மை­யா­ன­தா­க­வும் அர்த்­த­முள்­ள­தா­க­வும் திருப்பி எடுக்­கப்­பட முடி­யா­த­தா­க­வும் இருக்­க­வேண்­டும்.
அதற்­காக புதிய அர­ச­மைப்­புச் சட்­டம் கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்­டும். அது­தான் கூட்­டாட்சி. அது இடைக்­கால அறிக்­கை­யில் கூட இருக்­கி­றது. பிர­தான அறிக்­கை­யில் கூட இருக்­கி­றது. நான்கே நான்கு பக்­கங்­க­ளைப் படித்­துப் பார்த்­தால் தெரி­யும்.

பௌத்த சம­யத்­துக்கு முத­லி­டம் என்று பெரும்­பான்­மை­யான மக்­கள் விரும்­பி­னால், மதச் சார்­பற்ற நாடாக இருக்­க­வேண்­டும் என்­பது எங்­க­ளு­டைய கொள்­கை­யாக இருந்­தா­லும் அவர்­கள் அதனை விரும்­பு­வார்­கள் என்­றால், அதற்கு நாங்­கள் தயார். ஆனால் எந்த அடிப்­ப­டை­யில் இணங்­கத் தயார் என்­றால் எந்த சம­யத்­துக்கோ, நம்­பிக்­கைக்கோ, நம்­பிக்கை இல்­லா­த­வ­ருக்கோ பார­பட்­ச­மாக நாடு இருக்­க­மு­டி­யாது என்ற அடிப்­ப­டை­யி­லேயே. இன்­றைக்கு இருக்­கின்ற உறுப்­புரை ஒன்­பது மாற்றி எழு­தப்­ப­ட­வேண்­டும்.

மாற்றி எழு­தப்­ப­டு­கின்ற வாச­க­மும் இடைக்­கால அறிக்­கை­யிலே இருக்­கி­றது. முத­லி­டம் என்ற சொல்­லைச் சொல்­லி­விட்டு சில சரித்­திர கார­ணங்­க­ளா­லேயே, அப்­ப­டி­யான முத­லி­டம் என்று அவர்­கள் விரும்­பி­னால், அது ஏனை­யோரை பார­பட்­ச­மாக நாடு நடத்த முடி­யாது என்­கின்ற நிலைப்­பாட்­டுக்கு நாங்­கள் வரு­வோம். மிகுதி எல்லா விட­யங்­க­ளும் நாங்­கள் இணங்­கக் கூடி­ய­தக இருக்­கின்­ற­போது அதை நாங்­கள் பரி­சீ­லிக்­கத் தயார் என்று சொல்­லி­யி­ருக்­கின்­றோம்.

அதி­கா­ரப் பகிர்வு சம்­பந்­த­மாக முழு­மை­யான இணக்­கத்தை எமது மக்­கள் சார்­பில் கொடுப்­ப­தற்கு நாங்­கள் தயா­ராக இருக்­கின்­ற­போது, நாங்­கள் பரி­சீ­லிக்­கத் தயா­ராக இருக்­கின்­றோம் என்று சொல்­லி­யி­ருக்­கின்­றோம். இது பேச்சு மேசை­யி­லேயே செய்­யப்­பட வேண்­டிய விட­யம். இது அடித்­துப் பறிக்­கிற விட­யம் அல்ல. பேச்சு மேசை­யில் போய் பல்­வேறு வித்­தி­யா­ச­மான நிலைப்­பா­டு­க­ளைக் கொண்­ட­வர்­கள் சேர்ந்து அமர்ந்து இருந்து ஒரு இணக்­கப்­பாட்டை எட்­டு­கின்ற பொழுது ஒரு தரப்­பும் 100 வீத­மாக வெல்­ல­மு­டி­யாது. இது எங்­க­ளுக்­குத் தெரிந்­தி­ருக்க வேண்­டும்.

பேச்சு மேசை­யில் விட்­டுக்­கொ­டுப்பு இருக்­கத்­தான் வேண்­டும். இதைச் சொல்­லு­வ­தற்­குப் பயந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள்.
விட்­டுக்­கொ­டுத்­துத்­தானே செய்ய வேண்­டும். விட்­டுக்­கொ­டுப்பு இல்­லா­மல் வெவ்­வேறு நிலைப்­பா­டு­க­ளில் இருக்­கி­ற­வர்­கள் இணங்கி வர­லாமா? ஆனால் அந்த விட்­டுக்­கொ­டுப்பு ஒன்று கூட எங்­க­ளு­டைய அடிப்­ப­டை­யான வேண­வாக்­களை இல்­லா­மல் செய்ய முடி­யாது. நாங்­கள் ஒரே நாட்­டில் வாழ்­வ­தற்கு இணங்­கு­கின்­றமே அது பெரிய விட்­டுக்­கொ­டுப்பு. தனி­நாடு கோரிய நாங்­கள் ஒரு நாட்­டுக்­குள் தீர்­வுக்கு இணங்­கி­யுள்­ளோம். இது விட்­டுக்­கொ­டுப்­புத்­தான். எங்­கள் அடிப்­படை வேண­வாக்­களை நாங்­கள் விட்­டுக் கொடுக்­க­வில்லை. வேறு வேறு விட­யங்­க­ளில் விட்­டுக் கொடுத்­தி­ருக்­கின்­றோம்.

ஆனால் எங்­கள் அடிப்­ப­டை­களை விட்­டுக் கொடுக்­க­வில்லை. வேறு விட­யங்­க­ளில் விட்­டுக் கொடுத்து முதன்­மை­யா­னதை நாங்­கள் நிறை­வேற்ற முயற்­சிக்­கின்­றோம். வேறு மாற்­று­வழி இருந்­தால் எவ­ரா­வது சொல்­லட்­டும். இதனை வேண்­டாம் என்று விட்டு வந்­தால் என்ன செய்­வது ? யாரைக் கேட்­டா­லும் வெளி­நாடு செல்­லப் போகின்­றோம் என்­கி­றார்­கள். இது தொடர்­பில் வட­ம­ராட்சி கிழக்­கில் நான் ஆய்வு நடத்­தி­னேன். அங்­குள்ள பத்து பேரில் 9 பேர் வெளி­நாடு போக விரும்­பு­கின்­றோம் என்று சொல்­கின்­றார்­கள்.

இப்­ப­டியே போனால் 20ஆண்­டு­க­ளில் இங்கு இனப் பிரச்­சி­னையே இருக்­காது. எங்­க­ளு­டைய இனமே இருக்­காது. வெளி­நாட்­டில்­தான் எங்­க­ளு­டைய இனம் இருக்­கப்­போ­கின்­றது. நாடு கடந்த அரசு மாத்­தி­ரம் இருக்­கும். அதற்­காக தரு­வதை நாங்­கள் பெற்­றுக் கொள்­ளப் போவ­தில்லை. நாங்­கள் எங்­கள் அடிப்­ப­டை­களை விட்­டுக் கொடுக்­க­வில்லை என்­ப­தற்கு இடைக்­கால அறிக்­கை­தான் ஆதா­ரம். அது நிறை­வேற வேண்­டு­மா­னால், இந்த நாட்­டில் இருப்பை தக்க வைக்­க­வேண்­டு­மா­னால், தொடர்ச்­சி­யாக இந்த நாட்­டில் தமிழ் மக்­கள் வாழ­வேண்­டு­மாக இருந்­தால், சரித்­தி­ரத்­தில் தமி­ழர்­க­ளுக்கு ஒரு தாய­கம் இங்கே இருக்­கின்­றது. அவர்­க­ளும் ஒரு தேசம் இருக்­கின்­றது.

சிங்­க­ள­வர்­கள் மட்­டும் இங்கே இருக்­கின்ற தேசம் அல்ல. தமிழ் மக்­க­ளும் ஒரு தேசம். அவர்­கள் ஆட்சி அதி­கா­ரங்­க­ளைப் பகிர்ந்து கொண்டு ஒரே நாட்­டிலே வாழ்­வ­தற்கு இணங்கி வந்­தி­ருக்­கி­றார்­கள் என்று சரித்­தி­ரம் எழு­தப்­பட வேண்­டு­மாக இருந்­தால், இந்த முயற்சி பலிக்க வேண்­டும். இந்த முயற்சி பலிப்­ப­தற்கு, தமிழ் மக்­க­ளு­டைய ஆத­ரவு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு இருப்­ப­தாக காண்­பிக்­கப்­பட வேண்­டும்.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­ந­டத்­தல் குழு­வில் 5பேர் தமி­ழர்­கள். அவர்­க­ளில் இரு­வர், இரு­மு­வ­தற்கோ, தும்­மு­வ­தற்கோ வாய் திறக்­க­வில்லை. அமைச்­சர் சுவா­மி­நா­தன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்தா இரு­வ­ரும் வழி­ந­டத்­தல் குழு­வின் 76 கூட்­டங்­க­ளில் ஒரு தடவை கூடப் பேசி­ய­தில்லை. அமைச்­சர் மனோ­க­ணே­சன், கூட்­டாட்சி, வடக்கு – கிழக்கு இணைப்­புப் பற்றி எது­வுமே கதைப்­ப­தில்லை. நானும், சம்­பந்­தன் ஐயா­வும் வடக்கு – கிழக்கு மக்­கள் சார்­பில் அங்கே பேசி­னோம்.

பெப்­ர­வரி 11ஆம் திகதி, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு தமிழ் மக்­கள் ஆத­ரவு சரிந்து விட்­டது என்ற செய்தி வந்­தால், புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­திற்­கான இடைக்­கால அறிக்­கையை நிறை­வேற்­றாது போய்­வி­டும்.

இப்­போ­துள்ள ஆத­ர­வு­ட­னேயே நிறை­வேற்ற முடி­யுமா ? இல்­லையா என்று கேட்­டால் எனக்­குத் தெரி­யாது என்­று­தான் சொல்­வேன். மக்­கள் கூட்­ட­மைப்­புக்கு கொடுத்த ஆணை­யி­லி­ருந்து மாற­வில்லை என்ற செய்தி வர­வேண்­டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts