தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களை தீர்மானிக்கும் உயர்மட்ட கலந்துரையாடல் தற்பொழுது திருகோணமலையில் நடந்து கொண்டிருக்கிறது. இதுவரையான கலந்துரையாடல்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவில் போட்டியிட்டு தோல்வியடைந்த பெண் வேட்பாளரான சாந்தி சிறிஸ்கந்தராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மற்றவரை தேர்வு செய்யும் கலந்துரையாடல் தொடர்ந்து நடந்து வருகிறது. அதுபெரும்பாலும் கிழக்கு மாகாணத்திற்கே வழங்கப்படும் என எதிர்பார்க்கபப்டுகின்றது .
- Sunday
- February 23rd, 2025