கூட்டமைப்பில் தோல்வியடைய உள்ள அரசதரப்பில் வெற்றிபெறவுள்ள வேட்பாளர்கள் யார்? ஆவலில் ஆதரவாளர்கள்!

நடந்து முடிந்த தேர்தலில் ஆசனங்கள் முடிவாகியுள்ள நிலையில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் கூட்டமைப்பில் தோல்வியடைய உள்ள அரசதரப்பில் வெற்றிபெறவுள்ள வேட்பாளர்கள் யார்? என்ற ஆவலில் ஆதரவாளர்கள் உள்ளனர். இன்னும் சில மணிநேரத்தில் இதற்கான விடை தெரிந்துவிடும். கூட்டமைப்பு 30 இடங்களையும் அரசு 7 இடங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் 1 இடத்தினையும் பெற்றிரு்கின்றது.

அதே நேரத்தில் அடுத்ததாக கூட்டமைப்பினால் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் நிறுவப்பட உள்ள அரசில் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் இருந்து அமைச்சரவைக்கு நியமிக்கப்படஉள்ளவர்கள் யார் என்ற கேள்விக்ளும் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது. 4 அமைச்சுக்கள் உள்ளன அவற்றுக்கு பொருத்தமானவர்களை நியமிக்கவே்ணடிய தேவை கூட்டமைப்பினருக்கு இருக்கிறது. அவர்கள் முதலமைச்சருடன் ஒத்துழைக்கக் கூடிவர்களாகவும் துறைசார்ந்த விற்பன்னர்களாகவும் இருக்கவேண்டியது அவசியமாகின்றது.அதேவேளை கூட்டமைப்பில் உள்ள கட்சிகளையும் சமாதானப்படுத்தவேண்டியும் இருக்கும்

அமைச்சரவை தெரிவுகள் விருப்புவாக்கின் அடிப்படையில் இருக்காது என்றே நம்பப்படுகின்றது. காரணம் மக்கள் சின்னத்தக்கு தான் கூடுதல் முக்கியத்தவம் கொடுத்தனரே தவிர இலக்கங்களுக்கு அல்ல.அதனை கூட்டமைப்பின் தலைமை முதலமைச்சருடன் இணைந்து தெரிவுசெய்யும் என கூறப்படுகின்றது.

அமைச்சர் பதவிக்கு சி.வி.கே சிவஞானம்,குருகுலராஜா,ஐங்கரநேசன்,சர்வேஸ்வரன்,மற்றும் முல்லைத்தீவு ,மன்னாரைச்சேர்ந்த வைத்தியர்களின் பெயர்கள் பேசப்படுகின்றன. எது எப்படியோ மேற்படி உறுப்பினர்கள் முதலில் வெற்றிபெற்றிரு்க்கவேண்டியது அவசியமாகின்றது. எது எப்படியோ இன்னும் ஒரு உ்ள்வீட்டு சண்டையினை இந்த தெரிவு முயற்சிகள் ஏற்படுத்திவிடக்கூடாது என தமிழ்த்தேசிய அரசியல் அவதானிகள் விரும்புகின்றனர்.

பிந்திய செய்தி

இதேவேளை யாழ்ப்பாணத்தில் அரசுக்கட்சிக்கான 2 இடங்களுக்கு கமலேந்திரன் மற்றும் அங்கஜன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்

யாழ் மாவட்டத்தில் இருந்து வட மாகாண சபைக்கு தெரிவானோர் விபரங்கள் முழுமையாக வெளியாகியுள்ளன. (வாக்குகளின் அடிப்படையில்)

தமிழ் தேசிய கூட்டமைப்பு :

1. சி.வி.விக்னேஸ்வரன் (முதலமைச்சர்) – 132255
2. அனந்தி எழிலன் – 87870
3. சித்தார்த்தன் – 39715
4. பா.கஜதீபன் – 29669
5. இ.ஆர்னோல்ட் – 26888
6. கந்தையா சிவஞானம் – 26747
7. கே.சிவாஜிலிங்கம் -22660
8. ஐங்கரநேசன் பொன்னுத்துரை – 22268
9. எஸ்.சுகிர்தன் – 20541
10. கே.சயந்தன் – 20179
11. விந்தன் கனகரத்தினம் – 16463
12. ஏ.பரம்சோதி – 16359
13. கந்தையா சர்வேஸ்வரன் – 14761
14. வி.சிவயோகன் – 13479

ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணி :
1. கமலேந்திரன் – 13632 (ஈபிடிபி)
2. அங்கஜன் இராமநாதன் – 10034 (சுதந்திரக்கட்சி)

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் போட்டியிட்டவர்களில் யாழ்மாவட்டத்தில் தம்பிராஜா,தர்மலிங்கம்,குகதாஸ்,ஜெயசேகரம்,சுப்பிரமணியம்,கனகரத்தினம் ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர்

* க. தர்மலிங்கம் -13256
* எஸ். குகதாஸ் -13256
* த. தம்பிராசா -7325
* என். வி. சுப்பிரமணியம் -6578
* ஆர். ஜெயசேகரம் -6275

கிளிநொச்சியில் ஆனந்தசங்கரியும், மன்னாரில் சிவகரனும் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts