ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து ஜாதிக ஹெல உறுமய விலக தீர்மானித்துள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அக் கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார்.
இதேவேளை ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பெயரை, எக்ஸத் யஹபாலன ஜாதிக பெரமுன (ஐக்கிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணி) என மாற்றியமைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இதுவரை சங்காக இருந்த கட்சிச் சின்னத்தை வைரமாக மாற்றி அமைத்துள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் மேலும் கூறியுள்ளது.
இதேவேளை அரசியல்கட்சிகள் தமது பெயர் மற்றும் சின்னத்தை மாற்றிக் கொள்ள வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.
அரசியல் கட்சிகள் நான்கு இவ்வாறு மாற்றங்களை மேற்கொள்ள விண்ணப்பித்திருந்ததாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.