“நான் அரசியலுக்கு விரும்பி வந்த ஒரு பெண்ணல்ல என்னை அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லி தமிழரசுக்கட்சியினர் கொண்டுவந்து விட்டு இப்போது நட்டாற்றில் கொண்டு வந்து விட்டதுபோல் இப்போது ஒரு உணர்வு க்குள் இருக்கின்றேன்” என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட விரும்புவதாகவும், மக்களின் விருப்பமும் அதுவாகவே உள்ளதெனவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.தான் களமிறங்கினால் வீட்டில் போட்டியிடும் பழையவர்களில் ஒருவர் வீட்டுக்கு செல்ல வேண்டி ஏற்படும் என அஞ்சுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு மக்கள் என்னை இம்முறை பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குமாறு வற்புறுத்திய வண்ணம் உள்ளனர்.
பல்கலைகழகத்தில் உள்ளவர்களும் புலம்பெயர்ந்தவர்களும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியில் இறக்கி வெற்றி வைக்க முடியும் என்று கூறுகின்றனர் .எனவே கூட்டமைப்பு வாய்ப்பு வழங்கப்படாவிட்டால், தான் வேறு கட்சியில் போட்டியிட தயாராக உள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார்.