யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உதயசிறியை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலேயே உதயசிறி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
“யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் வைத்து வேட்பாளர் உதயசிறி தாக்கப்பட்டார் என்று முறைப்பாடு கிடைத்தது. அதுதொடர்பில் அவரைத் தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் நான்கு பேரிடமும் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் உதயசிறி மற்றும் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் இன்று முற்படுத்தப்படுவர்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.
- Wednesday
- January 22nd, 2025