தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும் சர்ச்சைகள் குழப்பங்களின் மத்தியில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக்கட்சிக்கு யாழ் மாவட்டத்தில் ஆறு வேட்பாளர்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன்படி அந்தக்கட்சியின் சார்பில் மாவை.சேனாதிராஜா, சுமந்திரன், சரவணபவன், சிறிதரன், அருந்தவபாலன் ஆகியோருடன் பெண் வேட்பாளராக மதினி நெல்சன் போட்டியிடுகிறார்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி சார்பில் ஒதுக்கப்பட்ட இரண்டு வேட்பாளர்களிற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் வல்வெட்டித்துறை முன்னாள் நகரசபைத்தலைவர் ந.அனந்தராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
புளொட் சார்பில் அதன் தலைவர் சித்தார்த்தன் களமிறங்குகிறார்.
ரெலோ சார்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா களமிறங்குகிறார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினராக இருந்து சுட்டுக்கொல்லப்பட்ட நடராஜா ரவிராஜ் அவர்களின் பாரியார் சசிகலா ரவிராஜ் , பேராசிரியர் சிற்றம்பலம், சட்டத்தரணி தமிழ்மாறன் ஆகியோர் தேசியப்பட்டிலுக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளதாகவும் தெரியவருகின்றது.
இன்று பிற்பகல் 2மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது