கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன்! – சம்பந்தன்

vikneswaranவடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

பம்பலப்பிட்டியிலுள்ள கூட்டமைப்பின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை தெரிவு செய்ய வேண்டும் என அக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் தெரிவித்திருந்தனர்.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தர் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் முன்னாளர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனே முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நியமித்தால், பதிலடியாக வடக்கு தமிழரசுக் கட்சியினர் தனி அணியாக தேர்தலில் குதிப்பார்கள். இவ்வாறு நேற்று இரவு வடக்கு தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்

இதேவேளை வடக்கு மாகாணத் தேர்தல் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதற்கு உடனடியாக மத்திய செயற்குழுவை கூட்டுமாறு தமிழரசுக் கட்சியின் யாழ். கிளையினர், கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.மத்திய செயற்குழுவில் அங்கம் வகிக்கும் 17 உறுப்பினர் கையொப்பம் இட்ட கடிதம் ஒன்று தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

என்னைவிட மாவைக்கே அதிக அரசியல் அனுபவம்; – விக்னேஸ்வரன்

Related Posts