கூட்டமைப்பின் சாதாரண கோரிக்கையை ஆராய தயார் – மஹிந்த

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாதாரண கோரிக்கைகள் குறித்து ஆராயப்படும் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பொதுத் தேர்தல் வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாத்தளை – நாவுல பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டை பிளவுபடுத்தும் கோரிக்கைக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

Related Posts