நேற்று (15) நண்பகல் 12.00 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பொதுக்கூட்டங்கள், கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களை நடத்துவதற்கு தடை விதித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிற்பகல் சுகாதார வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளார்.
கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையங்களில் மேலதிக வகுப்புகளை நடத்த இடத்தின் கொள்ளளவில் 50 சதவீதத்துடன் அனுமதிக்கப்படுகிறது.
கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உள்பட்டு பரீட்சைகளும் அனுமதிக்கப்படுகின்றன.