கூகுள் ஸ்ட்ரீட் வியூ இற்காக யாழ்ப்பாணத்தை படம்பிடிக்கும் கூகுள்

இலங்கையின் வீதி தோற்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை கூகிள் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கமெராக்கள் பொருத்தப்பட்ட கார்கள் மூலம் இலங்கையின் வீதிகள் படம் பிடிக்கப்படும்.

google-street-view

இதன்மூலம், இலங்கையிலுள்ள எந்தவொரு இடத்தையும் கூகிள் இணையத்தளத்தில் தத்ரூபமாக பார்வையிடக்கூடிய வசதி கிடைக்கிறது.

கூகிள் ஸ்ட்ரீட் வியூ என்ற சேவையில் 63 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றில் இலங்கையும் இணைந்துள்ளது.

இலங்கையில் யாழ்ப்பாணம், மாத்தறை, அருகம்பை முதலான பிரதேசங்களில் ஆரம்பிக்கப்படும் தரவு சேகரிப்பு திட்டம் விரைவில் முழு இலங்கையையும் உள்ளடக்கும் வகையில் விஸ்தரிக்கப்படவுள்ளதென கூகிள் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான ஆன் லின் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார்.

இந்த வசதி மூலம் இலங்கையின் இயற்கை அழகை முழு உலகமும் பார்க்கக்கூடியதாக இருக்கும் என சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் டீ.எஸ்.ஜயவீர தெரிவித்தார்.

உள்ளுர் சுற்றுலா பயணிகளும் இணையத்தின் ஊடாக பல இடங்களை பார்க்கக்கூடியதாக இருக்கும் என அவர் கூறினார்.

Related Posts