கூகுள் பலூன் பழுதடைந்து விழவில்லையாம்!!

கூகுள் பலூன் பழுதடைந்து விழவில்லை என கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பலூன், சோதனை நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கூகுள் நிறுவனம் இலங்கையில் வை-பை இணைய சேவையை வழங்குவதற்காக இலங்கைக்கு மேல் இணைய சேவையை வழங்கும் பலூன் ஒன்றை பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக அண்மையில் அனுப்பியிருந்தது.

இந்த பலூன் நேற்றைய தினம் கம்பொல – களுகல பகுதியில் வீழ்ந்துள்ளதாக பிரதேசவாசிகளினால் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியிலேயே இந்த பலூன் உடைந்து விழவில்லை என கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டு வரும் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts