கூகுள் பலூன் செயற்திட்டத்துக்கு மீண்டும் தோல்வி

கம்பியில்லா இணையத்தள வசதியை இலங்கை முழுவதும் குறைந்த கட்டணத்தில் வழங்கும் கூகுள் லூன் பலூன் செயற்திட்டம் இன்று மீண்டுமொரு முறை தோல்வியடைந்துள்ளது.

சீகிரியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யொவுன்புர இளைஞர் ஒன்றுகூடல் மைதானத்தில் இருந்து கூகுள் பலூனை வானுக்கு ஏவும் செயற்திட்டத்தின் இரண்டாவது முயற்சி இன்று மேற்கொள்ளப்பட இருந்தது.

எனினும் பலூனுக்கு காற்றைச் செலுத்தும் முயற்சியின் போது அருகில் இருந்த குழாய் ஒன்றில் உரசி பலூன் சேதமடைந்து காற்று வெளியேறியுள்ளது. இதன் காரணமாக இன்று கூகுள் பலூனை வானில் செலுத்தும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த நிகழ்வின் அங்குரார்ப்பண வைபவத்துக்கு வருகை தந்திருந்த டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்டவர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதற்கு முன்னரும் தென்பகுதி வான் வழியாக இலங்கையின் வான்பரப்பில் பிரவேசித்த கூகுள் பலூன் ஒன்று புசல்லாவையில் உடைந்து விழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts