கூகுள் பலூன் குறித்து யாரும் அஞ்சவேண்டாம்! ஹரின் பெர்ணான்டோ

கூகுல் பலூன் வேலைத்திட்டம் சோதனை முயற்சி மாத்திரமே என்ற நிலையில், அது குறித்து யாரும் அஞ்ச வேண்டியதில்லை என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

பதுளையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனை அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் துளியளவு முதலீடு கூட இன்றி இந்த வேலைத்திட்டத்தை அமெரிக்க நிறுவனம் முன்னெடுக்கிறது.

கடந்த காலத்தில் பொது மக்களின் பணத்தை எடுத்து செய்மதி அனுப்பியது போன்றது இல்லை இந்த வேலைத்திட்டம்.

இது தோல்வி அடையும் பட்சத்தில், கைவிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Posts