கூகுள் தேடுபொறியில் இலங்கையின் போக்குவரத்து தகவல்

கூகுள் தேடுபொறி போக்குவரத்து விபரங்களை வழங்கும் சேவையைத் தற்பொழுது இலங்கையிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் போக்குவரத்து நெரிசல் குறைந்த வீதிகளை இலகுவாக அறிந்து கொள்ள முடியும்.

கூகுள் தேடுபொறியில் traffic என குறிப்பிட்டு தேடுவதன் மூலம் இந்த வரைபடத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

google-map-

ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளில் உள்ள கூகுள் வரைபடத்தின் மூலம் இதனை பார்வையிட முடியும்.

இந்த வரைபடத்தில்அதிக வாகன நெரிசல் கொண்ட பாதைகள் சிவப்பு நிறத்தாலும், வாகன நெரிசல் குறைந்த பாதைகள் பச்சை நிறத்தாலும் காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts