Ad Widget

கூகுளின் ஆண்ட்ராய்டு டிவி அறிமுகம்!

கூகுளின் ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை ஸ்மார்ட்போன், டேப்லட், வீடு மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களில் பொருத்தி உருவாக்கி கொண்டிருந்திருந்தது.

goole-tv

இந்த நிறுவனம் தற்பொழுது ஆண்ட்ராய்டு டிவி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இணையதள வசதியுடன் இயங்கும் ஸ்மார்ட் டிவிகளில் கூகுளின், ஆண்ட்ராய்டு செட்-ஆப் பாக்ஸ் மற்றும் வீடியோ கேம் கன்சோல்களை பொருத்திக்கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு டிவியில் யூசர்கள், படங்களை பார்க்கலாம், கூகுள் ப்ளேவில் இருந்து வீடியோக்கள், யூடூப், நெட்ப்ளிக்ஸ், பன்டோரா, ஹேங்அவுட்ஸ், ஸ்கைப், பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை டவுன்லோடு செய்து தொலைக்காட்சியில் காணலாம். கேம்பேட் உதவியுடன் ஆண்ட்ராய்டு கேம்களை தொலைகாட்சிகளில் விளையாடலாம். சோனி, ஷார்ப், பிலிப்ஸ் உள்ளிட்ட முன்னணி தொலைகாட்சிகளில் இந்த செட் ஆப் பாக்ஸ்கள் செயல்படும். நீங்கள் சுலபமாக உள்ளடக்கத்தை (content) கண்டுபிடிக்க வாய்ஸ் சேர்ச் பயன்படுத்த முடியும்.

மேலும், 2002ம் ஆண்டில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்கள் என்பன போன்ற மிகவும் சிக்கலான தேடல்களையும் மற்றும் கேள்விகளையும் கேட்கலாம். உங்களுக்கு பிடித்த விளையாட்டுகளை தொலைகாட்சியில் டவுன்சோடு செய்து கொண்டு விளையாடலாம்.

நீங்கள் என்பிஏ ஜாம் போன்ற மல்டி ப்ளேயர் விளையாட்டுகளையும் விளையாடலாம். ஏற்கனவே ஆப்பிள் டிவி என்ற பெயரில் ஆப்பிள் செல்போன் நிறுவனம் தயாரித்துள்ள செட் ஆப் பாக்ஸ்கள் எப்படி ஆப்பிள் நிறுவன ஐஓஎஸ் பிளாட்பார்மில் இயங்குகிறதோ அதைப்போல, கூகுள் ஆண்ட்ராய்ட் பிளாட்பார்மில் இயங்க உள்ளது.

Related Posts