குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்று அங்கு நிர்க்கதியான சில இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இதன்படி 83 பேர் நேற்று காலை 06.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக, வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் மட்டக்களப்பு, அனுராதபுரம், கண்டி, மாத்தளை, குருநாகல் மற்றும் தங்காலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மேலும் குவைத்திற்கு பணிப் பெண்களாக சென்று அங்கு பல்வேறு இன்னல்களையும் எதிர்நோக்கிய நிலையில் அந்த நாட்டிலுள்ள இலங்கைக்கான தூதரகத்தில் தங்கியிருந்த குழுவினரே இவ்வாறு நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.