யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவர் தனது 7 மாதக் குழந்தையை தடியால் அடித்துத்தும் ஒரு கையைப் பிடித்துத் தூக்கிச் சென்றும் இரக்கமின்றித் துன்புறுத்தும் காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.
அனைவரின் மனதையும் பதறவைக்கும் அந்த காணொலி தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்கவேண்டும் என்பதே அனைவரது கருத்தாக உள்ளது.
தாயார் குழந்தையை துன்புறுத்துவதை தடுக்காது ஒருவர் காணொலி பதிவு செய்துள்ளார். அந்தக் காணொலியே சமூக ஊடங்களில் பகிரப்படுகின்றது.
அத்துடன், குழந்தைக்கு எப்போது இந்த துன்புறுத்தல் இடம்பெற்றது என்பது தெரியவில்லை. குழந்தையை வைத்தியசாலையில் சேர்த்து குழந்தை மருத்துவ லல்லுநர் மற்றும் சட்ட மருத்துவ வல்லுநரின் பரிசோதனை அறிக்கை பெறப்படவேண்டும்.
அந்தக் குழந்தையின் தாய் பற்றி அறிந்தவர்கள் இந்த தொலைபேசி இணைப்புக்கு முறையிடுங்கள்.
நல்லூர் பிரதேச செயலக பிரிவுக்குள் வரும் மணியந்தோட்டத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றிருப்பதாக அந்த தாயாரைத் தெரிந்தவர்கள் சமூக வலைத் தளங்களில் பதிவிடுகின்றனர். எனவே இதுதொடர்பில் உரிய நடவடிக்கையை எடுக்கும் பொறுப்பு நல்லூர் பி்ரதேச செயலாளருக்கு உண்டு.
எனவே குழந்தையை கொடுமைப்படுத்தும் பெண் மீது நடவடிக்கை எடுக்க அனைவரும் செயலாற்றவேண்டும். வழமை போன்று காணொலியைப் பதிவிட்டு கருத்துத் தெரிவித்து கடந்த செல்வதாக இந்த விடயம் அமையக் கூடாது.