குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து அச்சுறுத்திக் கொள்ளை!

யாழ்.தென்மராட்சி பகுதியில் குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து குடும்பத்தாரை அச்சுறுத்தி, நகை பணம் என்பவற்றைக் கொள்ளையடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தென்மராட்சி, அறுகுவெளி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நள்ளிரவு உட்புகுந்த நான்கு கொள்ளையர்கள் வீட்டில் உறங்கி கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில் வாளினை வைத்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டனர்.

அதன்போது தாலிக்கொடி, காப்புகள் உள்ளிட்ட 10 பவுண் நகை, 2 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2 பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் நால்வரும் மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்ததாக வீட்டில் இருந்தவர்கள் பொலிஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Related Posts