குளிர்பானங்களுக்கு குளிர் ஏற்றல் கட்டணம் அறவிடும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை

pepsi-coca-colaகுளிரூட்டப்பட்ட பானங்களுக்கு கட்டணம் அறவிடும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என். சிவசீலன் தெரிவித்தார்.

பாவணையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் சட்டத்தின் பிரகாரம் குளிர்பானங்கள் கொள்வனவு செய்யும் வர்த்தகர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து குறைந்தளவிலான விலையில் நிறுவனங்கள் பொருட்களை இறக்குமதி செய்கின்றதாகவும் அவர் கூறினார்.

அந்த வகையில், குளிர்பானங்களுக்கு குளிர் ஏற்றும் கட்டணம் அறவிடப்பட்டால், அந்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று அவர் மேலும் கூறினார்.

Related Posts