குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கவும்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு மக்கள் முன்வந்து தெரிவிக்க வேண்டும் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வூட்லர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாண முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்துக்கும் உதயகுமார வூட்லருக்கும் இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (16) இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது, உதயகுமார் வூட்லர் இந்த வெண்டுகோளை விடுத்துள்ளார்.

மதுபானம் அருந்திவிட்டு வீதிகளில் பயணித்தல் பெண்களுடன் தகாத முறையில் நடந்துகொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அவ்வாறு யாராவது செயற்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்துங்கள்.

அத்துடன், போக்குவரத்து தொடர்பிலும் சீரான நடைமுறை போக்குவரத்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் என்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி உதயகுமார வூட்லர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts