தான் 18 பில்லியன் டொலர்களை கொள்ளையிட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபித்தால் கழுத்தை அறுத்து கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் அந்த நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அவ்வாறு சில சந்தர்ப்பங்களில் குற்றம்சுமத்தியுள்ளதாக இதன்போது குறிப்பிட்ட மஹிந்த, தான் ஒரு டொலரையாவது கொள்ளையிட்டுள்ளதாக நிரூபித்தால் கழுத்தை அறுத்து கொள்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் எதிர்கால அரசியல் வாழ்க்கை தொடர்பில் அவர் இதன்போது குறிப்பிடுகையில் “அரசியல்வாதிகள் ஒருபோதும் ஓய்வுபெற மாட்டார்கள்” என கூறியுள்ளார்.
அத்துடன், தான் 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தமை தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை தனக்கு எதிராக தி