நாட்டில் தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சமையல் எரிவாயு தொடர்பான தீ பரவல் மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், அது தொடர்பில் அறிவித்தலொன்றை விடுத்துள்ள லிட்ரோ நிறுவனம், தரம் குறைந்த சாதனங்கள் காரணமாக இச்சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது.
குறித்த அறிவித்தல் வருமாறு,
- தேசிய எரிவாயு வழங்குனரான Litro Gas Lanka Ltd, தான் இறக்குமதி செய்யும் LP வாயுவானது, சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட புரபேன் மற்றும் பியுற்றேன் கலவையைக் கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துவதுடன், அதன் ஏற்றலின் போதும் இறக்கலின் போதும் GEO-CHEM LANKA (PVT) LTD நிறுவனத்தால் இரு தடவைகள் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
- கொள்வனவு செய்யப்பட்ட எரிவாயுவானது, உரிய டெண்டர் ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதுடன், அவை கிடைக்கப் பெற்றவுடன், எழுந்தமாறான அதன் மாதிரிகள் GEO-CHEM நிறுவனத்தால் ஆய்வு செய்யப்படுகிறது. எனவே, இந்தச் செயல்பாட்டின் போது வேறு எந்தவொரு கலப்படமோ, கலவையில் மாற்றமோ மேற்கொள்ளப்படுவதில்லை என்பதுடன், கிடைக்கின்ற அடிப்படை மூலத்திலிருந்தான அதே தயாரிப்பையே நுகர்வோர் பெறுகின்றனர்.
- சமீபத்திய சம்பவங்கள் மற்றும் குழப்பங்களுக்கான காரணம், குறைந்த தரத்திலான ரெகுலேட்டர்கள், குழாய்கள், அடுப்புகள் மற்றும் பாவனையாளர்களின் அலட்சியம் காரணமாக ஏற்பட்டுள்ளன.
- இது தொடர்பில் ஏதேனும் அவசரநிலை அல்லது சிக்கல்கள் தொடர்பிலான உதவி மற்றும் வழிகாட்டலுக்கு 1311 எனும் உடனடி தொலைபேசி இலக்கத்தை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளலாம். நுகர்வோர் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் தயாரிப்பை சேதப்படுத்துவதையோ அல்லது தவறாக கையாளுவதையோ தவிர்க்க வேண்டும்.
அத்துடன் சமையல் எரிவாயு தொடர்பில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது…