குறைகளைக் கூறுவதை நிறுத்தி மக்களுக்கு நிறைவான சேவைகளை வழங்கவேண்டும் – அரசாங்க அதிபர்.

குறைகளைக் கூறி நியாயப்படுத்துவதை நிறுத்தி இங்கிருக்கின்ற வளங்களை வைத்துக்கொண்டு மக்களுக்கான சேவைகளை நிறைவாக செய்ய வேண்டும் என யாழ் . மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

dak-suntharam-arumainayagam-GA

யாழ் . மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று இணைத்தலைவர்களில் ஒருவரான பாரம்பரிய கைத்தொழில் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமயில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் ,

யாழ் . மாவட்டத்தில் பல குறைகளும் தேவைகளும் காணப்படுகின்றன . இவற்றை நிவர்த்தி செய்து இருக்கின்ற வளங்களைப் பயன்படுத்திச் செயலாற்றவேண்டும் . கிராம அலுவலர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது . இருந்தும் மக்களுக்கான தேவைகள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன . இத்தகைய செயற்பாடுகள் மூலம் ஏனைய திணைக்களங்கள் , அரச தலைவர்கள் , மக்களுக்கான சேவைகளை முறையாகச் செய்ய முற்படவேண்டும் என்று மேலும் அவர் தெரிவித்தார் .

Related Posts