குறிசுட்டகுளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி

வவுனியா மாவட்டம் கனகராயன்குளத்திலுள்ள குறிசுட்டகுளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி பாடசாலை அதிபர் செல்வி ஜெயந்தினி அவர்களது தலைமையில் நேற்று(17 மாசி 2017) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொருளாளர் கனகையா ஸ்ரீகிருஸ்ணகுமார் மற்றும் மேலும் நெடுங்கேணி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர். மற்றும் வவுனியா வடக்கு கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்கள், அயல்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகளும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

மேலும் படங்களுக்கு..

Related Posts