குரும்பசிட்டியில் வீடுகள் இடிக்கப்படுவதாக மக்கள் புகார்

Sritharanவலிகாமம் வடக்கு, குரும்பசிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்களின் வீடுகள் படையினரால் இடிக்கப்படுவதாக பொதுமக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனிடம் முறையிட்டுள்ளனர்.

“வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் வளலாய் தொடக்கம் மாவிட்புரம் வரை படையினரால் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பாதுகாப்பு வேலியை அண்டிய பகுதியில் குறித்த பகுதிக்கான நிரந்தர பாதை அமைப்பதற்காகவே பொதுமக்களின் வீடுகள் படையினரால் இடிக்கப்பட்டு வருதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்” என அவர் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

Related Posts