குரும்பசிட்டியில் மின் வசதி இல்லாததால் களவாடப்படும் வீட்டுப் பொருள்கள்

Theft_Plane_Sympol-robberyவலி.வடக்கு குரும்பசிட்டிப் பகுதியில் மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டு 2 வருடங்களாகின்ற போதும் அந்தப் பிரதேசத்துக்கு இதுவரையில் மின்சாரம் வழங்கப்பட வில்லை.

இதன் காரணமாக மக்கள் மீளக் குடியமராத வீடுகளின் பொருள்கள் இரவு நேரங்களில் திருட்டுப் போவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வலி.வடக்கில் குரும்பசிட்டிப் பகுதியில் மக்கள் மீளக்குடியமர்வதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டனர்.

பெரும்பான்மையான மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்ந்துள்ளனர். அவர்கள் மீளக் குடியமர்ந்து 2 வருடங்கள் கடக்கும் நிலையிலும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் ஊடான மின்சாரம் இன்னமும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் மக்கள் குடியமராத வீடுகளில் கூரைகள், கதவுகள், ஜன்னல்கள் என் பன இரவு வேளைகளில் திருடப்படுகின்றன. இதற்கு அந்தப் பகுதிகளில் கடமைகளில் உள்ள சீருடையினரும் உடந்தையாக உள்ளனர் என்று அந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Related Posts