குருந்தூர் மலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட அதிகாரிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலைக்கு நேற்று (17) புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது குருந்தூர்குளம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

கடந்த மாத இறுதியில் குருந்தி ராஜமஹா விகாரை அமைந்துள்ள தொல்பொருள் பகுதிக்கு சொந்தமில்லாத காணியில் இருந்து 3 ஏக்கர் காணியை ஒதுக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன முன்மொழிந்திருந்தார்.

அத்துடன் பௌத்த விகாரை மற்றும் இந்து ஆலயம் மற்றும் பொது வசதிகளுக்காகவும் அமைப்பதற்கும் இந்த காணியை ஒதுக்குமாறு, இளைஞர் பாரம்பரியம் மற்றும் நவீன குடிமக்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு முன்மொழிந்திருந்தார்.

இந்நிலையிலேயே இன்று அதிகாரிகள் குருந்தூர் மலைக்கு கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

Related Posts